Showing posts with label தப்பிய மனைவி...சிக்கிய மகள் கனிமொழி. Show all posts
Showing posts with label தப்பிய மனைவி...சிக்கிய மகள் கனிமொழி. Show all posts

Monday, 23 May 2011

தப்பிய மனைவி...சிக்கிய மகள் கனிமொழி?

தப்பிய மனைவி...சிக்கிய மகள் கனிமொழி.?

கருணாநிதி நிருபர்களை சந்தித்த போது ,குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகவில்லை.தயாளு கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால் ,காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறுமா..? என ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்..கருணாநிதி கொந்தளித்தார்.சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள்..நீயுமாம்மா..?என்றாராம்.ஆனால் அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோது ,பெண்ணாக இருந்துகொண்டு,இது மாதிரி பேசக்கூடாது.பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது’என கனிவாக மாற்றப்பட்டுவிட்டது.

(இதயம் இல்லாத பெண் என கலைஞர் யாரை சொல்கிறார்..ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது நடேசன் எதையாவது செய்து எம்மக்களை காப்பாற்றுங்கள் என கனிமொழியிடம் மன்றாடியபோது,சுரத்தே இல்லாமல் ஆயுதங்களை நீங்கள் கீழே போடுங்கள்..அவர்கள் தாக்குவதை நிறுத்திவிடுவார்கள் என கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருந்தாராமே..அந்த கனிமொழியையா கலைஞர் இதயம் இல்லாத பெண் என்கிறார்..? )

தயாளு அம்மாள் விடுபட்டது எப்படி..?

அவரை பொறுத்தவரை சிபிஐ அதிகாரிகளிடம் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கிறதாம்...எனக்கு எதுவும் தெரியாது...சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்து போட்டேன்...நீங்க சொல்ர போர்டு மீட்டிங்க்ல இதுவரை கலந்துகிட்டதே கிடையாது ...என் சொன்னதை சிபிஐ அதிகாரிகள் நம்பி,வயதை அனுசரித்தும், பெயரை நீக்கினார்களாம்..

கனிமொழி மீது குற்றசாட்டு என்னாகும்..?

குற்ற உடந்தை என்ற கடுமையான வார்த்தையை கனிமொழி மீது சி.பி.ஐ பயன்படுத்தி உள்ளது..சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு ,ஆ.ராசாவை போலவே பல மாதங்கள் ஆகலாம்...கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது.என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிக்கை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.கவும் தயாராகி வருகிறது. அன்று உயர் மட்ட செயல்திட்டக்குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது..தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்பட்ட தி.மு.க கடந்த மார்ச் 4 ஆம்தேதி காங்கிரசுக்கு செக் வைத்து பின்வாங்கியது...ஒன்றரை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது....

VMware Cloud Learning Video's

Here is a nice summary list of all VMworld US 2018 Breakout session with the respective video playback & download URLs. Enjoy! Bra...