Sunday 22 May 2011

கனிமொழி நாடகம் முடிவுக்கு வந்தது!

கனிமொழி நாடகம் முடிவுக்கு வந்தது!

கனிமொழி ஸ்பெக்ட்ரம் விசாரணைக்கு வந்தார்.சி.பி.ஐ.கோர்ட்டில் சம்பிரதாய விசாரணைகள் முடிந்தது.வரும் 12 ஆம் தேதி,வருமான வரி அலுவலகத்தில் கனிமொழிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.14 ஆம்தேதி மீண்டும் சி.பி.ஐ கோர்ட்டில் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிறது.ம்.கனிமொழி மேடம் ரொம்ப பிஸிப்பா.

ஏற்கனவே சிறையில் உள்ள தொலை தொடர்பு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் கொதித்து போய் இருக்கின்றனர்.கனிமொழி விசயத்தில் மட்டும் சி.பி.ஐ பரபட்சமாக நடந்துகொள்கிறது என பால்வா வின் வக்கீல் ஆவேசமாக முழங்குகிறார்.அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேட்கிறார்..இதுக்கா தம்பி உன்னை பால்வா வக்கீலா நியமிச்சார்.உன் கட்சிகாரரை விடுதலை செய்ய யோசிக்காம கனிமொழி ஏன் இன்னும் அரெஸ்ட் செய்யப்படலைன்னு கேட்கிறது நியாயமா.பொறுங்க..அவங்களுக்குத்தான் திஹார் சிறைச்சாலை எண் 6 தயாரா இருக்குன்னு சொல்லிட்டாங்களே..ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு,வருவாங்க..தாத்தா வுக்கு ஒரு வாய்ப்பாக வரும் 14 ஆம் தேதி வரை தள்ளிப்போட்ருக்காங்க.




சரி,கலைஞர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் கனிமொழி விடுதலை ஆக முகாந்திரம் இருக்கான்னு யோசிச்சா,ம்ஹீம்..சட்டத்தின் ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன...இவர்களின் வக்கீலே ராசாதான் முழு சதிக்கும் காரணம்,கனிமொழி குற்றமற்றவர் என வாதாடியதால் ராசாவும் வெளியே வர வாய்ப்பில்லை.


கலைஞர் மகள் எனும் தகுதியை தவிர வேறு எதுவும் கனிமொழிக்கு அடையாளம் இருக்கிறதா என யோசித்துப்பாருங்கள்.அப்படியிருக்கையில் கனிமொழியை காப்பாற்றுவது கட்சியின் கடமை என்கிறாரே கலைஞர் அது எப்படி..? தி.மு.க என்ன சங்கரமடமா..? கட்சித்தலைவரின் வாரிசுகளை கட்சித்தொண்டர்கள் காப்பாற்ற..?

கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சிறையில் இருக்கும்போது,தலித்துகளின் தகத்தாய சூரியன் என புகழ்ந்துரைத்து,ராசா அப்ரூவர் ஆகாமல் வாயடைத்துவிட்டு,கனிமொழி அப்ரூவர் ஆகாமல் தடுக்க,நான் எப்போதும் கட்சியை காட்டிக்கொடுக்க மாட்டேன் என மறைமுகமாக இடித்துரைத்துவிட்டு...கட்சியினர் கனிமொழியை காக்க வேண்டும் என தூண்டிவிட்டு,பலே கலைஞர் அரசியல்.

இதுதான் ராஜதந்திரமாம்.வாழ்க ஜனநாயகம்..வளர்க.தி.மு.க சங்கரமடம்.

No comments:

Post a Comment

VMware Cloud Learning Video's

Here is a nice summary list of all VMworld US 2018 Breakout session with the respective video playback & download URLs. Enjoy! Bra...