Wednesday 11 May 2011

பரோடா ரெடி

பரோடா ரெடி

தேவையான பொருட்கள்

மைதா - 1/2 கிலோ
முட்டை - 2
பால் - 100 மில்லி
சோடா உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை


1. முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் பால், உப்பு, சோடா உப்பு, மைதா, எண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி ஆகியவை சேர்த்து நன்றாக அடித்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

3. தனியே ஒரு பாத்திரத்தில் மீதி உள்ள எண்ணெயை ஊற்றி, உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை அதில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் எண்ணெயில் ஊறவைக்கவும்.

4. பின்னர் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, லேசாக கையால் தட்டி, பிறகு மெல்லியதாக விசிறிக் கொண்டு, வட்டமாக சுருட்டிக் கொள்ளவும்.

5. சுருட்டிய மாவை எடுத்து கைகளால் தட்டி தோசைக்கல்லில் இடவும்.

6. ஊற வைக்க பயன்படுத்திய எண்ணெய் சிறிது ஊற்றி, அதிகம் தீயவிடாமல் இருபக்கமும் திருப்பிப் போட்டு, நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு

1. சைவ பரோட்டாவுக்கு மூட்டைக்கு பதிலாக 1 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.

No comments:

Post a Comment

VMware Cloud Learning Video's

Here is a nice summary list of all VMworld US 2018 Breakout session with the respective video playback & download URLs. Enjoy! Bra...