Tuesday 21 June 2011

இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை

இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டத்துக்கு புறம்பான 6 படுகொலைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சித்ரவதைக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக இந்த மனுவை தாக்கல் செய்தவர்களின் சார்பிலான சட்டத்தரணியான புரூஸ் ஃபைன் கூறியுள்ளார்.

''அமெரிக்காவில் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரிடம் நட்ட ஈடு கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் கீழ் ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது'' என்றார் புரூஸ் ஃபைன்

திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் மனோகரனின் மகனுக்காகவும், அக்சன் பெஃய்ம் ஊழியர் ஒருவரின் உறவினர்களாலும், இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்கள் சிலருக்காவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹெய்க் மனித உரிமை சர்வதேச ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்ப்படையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி இந்த அழைப்பாணைக்கு பதிலளிக்காவிட்டால், அவருக்கு எதிராக தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கும் என்றும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டுக்கு உத்தரவிடப்பட்டால், அவருக்கு அமெரிக்காவிலோ அல்லது இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளிலோ இருக்கக்கூடிய சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்றும், அத்துடன் அங்கு போர் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகவும் மாறும் என்றும் புரூஸ் ஃபைன் கூறினார்.

No comments:

Post a Comment

VMware Cloud Learning Video's

Here is a nice summary list of all VMworld US 2018 Breakout session with the respective video playback & download URLs. Enjoy! Bra...